மோட்டிவேஷனல் ஸ்டோரி

உங்களை தூக்கி விட யாரும் இல்லை என்று கவலை பட வேண்டாம் ஏனென்றால் இவர்களும் அடுத்தவர் துணை இன்றி தானாக வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்...

சாதிக்க தூண்டும் கதைகளும் மற்றும் சாதித்தவர்களின் வரலாறும்..

சாதித்தவர்களின் வரலாறு

சாதித்தவர்களின் வரலாறு

வாழ்க்கையில் முதல் படியை கண்டு பயப்படாமல் கடைசி படியை தைரியமாக அடைந்தவர்கள் இவர்களை பற்றி பார்ப்போம்!!!

motivationalstory/engkal.com

வில்லியம் ஹென்றி கேட்ஸ்  (பில் கேட்ஸ்)அமெரிக்காவில் உள்ள  வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல். இவரது குடும்பம் இயற்கையாகவே செல்வ வளம் மிக்கதாகவும், இவரது தந்தை வழக்கறிஞராக  இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்குநர் வாரியதில் பணியாற்றினார்,

இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்கள் கணினியை பற்றி  பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.பில் கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை(Programming) டிக்-டக்-டே விளையாட்டுக்காக எழுதினார்,  அவர் கணினியின் மேல் அதிக ஆர்வம் உள்ளவராக இருந்தார். இவருடைய கணினி ஆர்வத்திற்கு பள்ளியும் உதவியாக இருந்தது அதனால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. தனது 13ஆம் வயதிலெயே நிரல்கள்(program) எழுதத் தொடங்கினார்.

பிறகு 1973ல் ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு அவரது நண்பர் ஸடீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.தனது படிப்பை ஹர்வர்ட் பல்கலை கழகத்தில் முடித்த பிறகு, தனது சிறு வயது நண்பர் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975ல் துவங்கினார். கணிப்பொறி வருங்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது. இதனால் அவர்கள் கணிப்பொறிக்குத் தேவையான மென்பொருள்களை எழுதத் துவங்கினர். அவருடைய எதிர்கால நோக்கம் தான்  இன்று அவருக்கும்  அவருடைய நிறுவனத்திருக்கும்  மிகப் பெரிய வெற்றியைத் தேடி தந்தது. இக்காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நவம்பர் 20, 1985 இல் மைக்ரோசாப்ட் விண்டோஸின் முதல் சில்லறை விற்பனை பதிப்பு வெளியிடப்பட்டது.

பில் கேட்ஸ் ஜனவரி 1, 1994 ஆம் வருடம் மெலிண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஜெனிபர் காதரின் , போஃப் அடேல் இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

பில் கேட்ஸின் “த ரோட் அகெட்”எனும் நூல் 1995 -ல் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் வருடம் வெளியான “பைரேட்ஸ் ஆப் தி சிலிகான் வேளி” என்ற திரைப்படத்தில் “ஆப்பிள்” மற்றும் “மைக்ரோசாப்ட்” நிறுவனங்களின் வளர்ச்சியே கதை கருவாக இருந்தது. இப்படத்தில் பில் கேட்ஸ் வேடத்தில் “அண்டோனி மைகேல் ஹால் ” என்ற நடிகர் நடித்தார்.

உலகின் செல்வந்தர்கள் வரிசையில்  தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

motivational\engkal.com

சுந்தர் பிச்சை என்கின்ற பிச்சை சுந்தரராசன் தமிழ் நாட்டில், மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார்.

சுந்தர் பிச்சையின் படிப்பு:

இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

பள்ளிக்காலத்திலிருந்தே தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதில் சுந்தர் பிச்சைக்குத் தனித் திறமை இருந்துவந்தது.

கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக அவருடைய 43 -வது வயதில் சுந்தர் பிச்சை  பதவியேற்றார்.

  சுந்தர் பிச்சை இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார். இவரை கூகுளின் அடுத்த முதன்மை செயல் அலுவலராக ஆகஸ்ட் 10, 2015 அன்று கூகுள் அறிவித்தது.

கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்துவந்தது.

இதற்கும் முன்னதாக, அந்நிறுவனத்தின் உயர்பதவியில் இருந்த லாரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்றவர்கள் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்புகளை சுந்தர் பிச்சையிடம் அளித்துவந்தாலும், இப்போது, அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க தொழில்நுட்பத்துறையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள சத்யா நாதெல்லாவுக்குப் பிறகு, மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

motivational\engkal.com

முகேஷ் அம்பானி (ஏப்ரல் 19,1957 ஆம் ஆண்டு பிறந்தார்).இவருக்கு அனில் என்று ஒரு சகோதரனும், தீப்தீ சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இந்தியாவின் மிக பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி (நிர்வாக இயக்குநர்) பதவிகளை வகித்தார். இவர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக 44.7% பங்கை கொண்டுள்ளார் மேலும் உலகின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் இயக்குபவர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு துறைஉரிமையாளர். அம்பானியின்  இளைய சகோதரரான அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமதின் தலைவர் ஆவார். அம்பானி குடும்பம் இந்தியாவிலேயே பணக்கார குடும்பமாகும் மேலும் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிறுக்கிறார், இவர்கள் தங்கள் செல்வத்தை ஒட்டு மொத்தமாக ரிலையன்ஸ் இந்திய குழுமத்தின் நிறுவுனரான திருபாய் அம்பானிஅவர்களிடமிருந்து வாரிசாக பெற்றனர்.

 2012 ல் இவர் ஆசியாவில் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகில் 19 வது பணக்கார மனிதராகவும் உள்ளார். இவரது தனிப்பட்ட சொத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் $ 22.3 பில்லியன் ஆகும். 2007 ல் இந்திய பங்கு சந்தையில் ஏற்படட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்தது. இதன் காரணமாக இவர் உலகின் அதி பணக்கார மனிதராக அறியப்பட்டார்.

அம்பானி இந்திய பிரீமியர் லீக் உள்நாட்டு கிரிக்கெட் கிளபின் மும்பை இந்தியன்ஸ் அனியின் உரிமையாளர் ஆவார்.

முகேசு அம்பானி தனது ஆரம்ப கல்வியை மும்பையில் உள்ள அபே மொரிச்சா பள்ளியிலும் தனது இரசாயன பொறியியல் பட்டப்படிப்பை தற்பொழுது இன்ஸ்டிடுட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, மும்பை என்று அழைக்கப்படும் யுடிசிடீயிலும் முடித்தார் . இவர் பல்கலைக்கழக தேர்வில் ஆறாவது இடத்தை பிடித்தார்.அம்பானி பின்னர் இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம் அல்லது ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகதில் எம்பிஏ எனும் இரண்டு ஆண்டு திட்ட படிப்பில் சேர்ந்தார் ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் 1980இல் படிப்பைக் கைவிட்டார்.

இவர் 1981இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசில் சேர்ந்தார். இவரது பயணம் ஒருங்கிணைந்த ரிலையன்ஸ் ஆரம்ப நிலையான நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் உற்பத்தியில் தொடங்கி மேலும் பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சியாக தொடர்ந்து விரிவடைந்தது.

அம்பானி, உலகின் மிகப்பெரிய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை கொண்ட ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிமிடெட்டை (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார்.

motivational/engkal.com

ஜாக்மா இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் மா.

ஜாக் மா (Jack Ma) இவர் செப்டம்பர் 10, 1964 -ல் பிறந்தார்.  இவர் புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராவார். ஃபோர்ப்ஸ் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்ற முதல் சீன நாட்டில் வாழும் சீனராவார்.

இளம் வயதிலே ஆங்கிலம் கற்றுக்கொள்ள  மிகுந்த ஆர்வம் காட்டிய மா. அருகில் தங்குவிடுதியிலிருந்த வெளிநாட்டவருடன் உரையாட 45 நிமிடங்கள் மிதிவண்டியில் செல்வார். கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார்.அதன் பின்  அங்சூ ஆசிரியக் கல்லூரியில் பயின்றார்.

1988இல் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே மாணவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அங்சூ டியான்சி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு வணிக விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மா முதலில் தமது அமெரிக்க நண்பர்களின் உதவியுடன் சீன நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கலானார்.

1995இல் மா சீன யெல்லோப்பேஜசு என்ற இணையதளத்தை நிறுவினார்; இதுவே சீனாவின் முதல் இணையவழி நிறுவனமாக பரவலாக நம்பப்படுகிறது. 1998 முதல் 1999 வரை சீன பன்னாட்டு மின்னணுவியல் வணிக மையம் என்ற தகவல் தொழில்நுட்பா  நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.1999இல் சொந்தமாக அலிபாபாவை நிறுவினார்;

நவம்பர் 2012இல் அலிபாபாவின் இணைய பரிவர்த்தனைகள் ஒரு டிரில்லியன் யுவானாக இருந்தது. இதனால் மா “டிரில்லியன் ஹூ” எனப்படுகிறார்; சீனமொழியில் “டிரில்லியன் யுவான் மார்கிசு” எனப் பொருள்படும்

motivational/engkal.com

விவேகானந்தர்  ஜனவரி 12 ,1863 ம் ஆண்டு பிறந்தார்.  கல்கத்தாவில் தந்தை  விசுவநாத் தாய்  புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும்,விளையாட்டில் அதிக ஆர்வம் உடையவராக திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாது தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான குரல் என்று சட்டம்பி சுவாமிகள், சுவாமி விவேகானந்தரது குரல் வளம் குறித்துக் கூறுகின்றார்.

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக…

இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாக  இருந்தது. மேலும், அந்த சமயத்தில்தான்  இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர்1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது

கருத்துக்கள்:

மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். . வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

 • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.
 • உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
 • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
 • எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
 • நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
 • இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
 • இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
 • வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
 • சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
 • என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
 • உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
 • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
 • நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.
motivational/engkal.com

மார்க் எலியட் சுக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) பிறப்பு: மே 14, 1984 .

இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். சுக்கர்பெர்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும் கிரிஸ் ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார். சுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கின் CEOவாக பணியாற்றுகிறார்.

2008 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக சுக்கர்பெர்க்கை சேர்த்தது. அவரது வலைத்தளத் தோற்றப்பாடு, பேஸ்புக் ஆகியவற்றிற்காக அறிவியலர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கீழ் வரும் 101 மனிதர்களுள் 52வதாகத் தரவரிசைப் படுத்தப்படுகிறார். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்இருந்து ஒரு பில்லியன் டாலர்களைக் காட்டிலும் அதிகமான மதிப்புடன் சுக்கர்பெர்க் இளம் தொழிலதிபராக இருக்கிறார்.

மார்க் சுக்கர்பெர்க் “உலக வாழ்க்கையை புதுவிதமாகவும் நேர்மறை எதிர்பார்ப்புகளுடனும் வாழுமாறு மாற்றியமைக்காக” டைம் இதழின் 2010ஆம் ஆண்டிற்கான நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் நடுநிலைப்பள்ளியில் இருந்த போதே நிரலாக்கம் செய்யத்தொடங்கினார். தொடக்கத்தில் சுக்கர்பெர்க் கணினி நிரல்களை உருவாக்குவதில் மகிழ்ச்சி கொண்டிருந்தார். குறிப்பாக தகவல் தொடர்புக் கருவிகள் மற்றும் விளையாட்டுகள் நிரலாக்கங்களில் ஆர்வமாய் இருந்தார். பிலிப்ஸ் எக்ஸெட்டர் அகாடமியில் சேர்வதற்கு முன்பு அர்ட்ஸ்லே உயர்நிலைப்பள்ளிக்கு மார்க் சென்று கொண்டிருந்தார். “உயர்நிலைப் பள்ளியில் அவர் இலக்கியங்களில் சிறந்து விளங்கினார். அவர் பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமிக்கு இடம் மாறிச்சென்றார். அங்கு லத்தினில் தன்னை முழுக்க ஆட்படுத்திக் கொண்டார். அவரது தந்தையின் அலுவலகத்தில் பணியாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு உதவியாக ஒரு நிரலையும் அவர் உருவாக்கினார்; அவர் ரிஸ்க் என்ற விளையாட்டின் பதிப்பையும் உருவாக்கினார்.

 பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமியில் அவரது நாட்களில் இருந்து ஃபேஸ்புக்கின் யோசனை அவருக்கு உதித்துள்ளது.

 கல்லூரியில் ஒருமுறை சுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக்கானது “ஹார்வர்டு-நினைவு” என்ற போக்கிலேயே தொடங்கியது. பின்னர் சுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மற்ற பள்ளிகளுக்கும் பரப்புவதற்கு முடிவெடுத்தார். இதை அவரது அறைத் தோழர் டஸ்டின் மோஸ்கோவிட்ச் உதவியுடன் செய்தும் முடித்தார். ஸ்டார்போர்டு, டார்ட்மவுத், கொலம்பியா, கார்னெல் மற்றும் யால் ஆகிய பள்ளிகளில் முதலில் ஃபேஸ்புக்கை அறிமுகப்படுத்தினார். 

செப்டம்பர் 5, 2006 அன்று ஃபேஸ்புக் நியூஸ் பீடு அறிமுகமானது. நியூஸ் பீடு என்பது வலைத்தளத்தில் உங்களது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் ஒரு தயாரிப்பு ஆகும். நியூஸ் பீடை தேவையற்றதாக சிலர் பார்த்ததற்காகவும் சைபர்ஸ்டால்கிங்கிற்கான கருவிக்காகவும் சுக்கர்பெர்க் விமர்சிக்கப்பட்டார்.

மே 24, 2007 அன்று ஃபேஸ்புக் இயங்குதளத்தை சுக்கர்பெர்க் அறிவித்தார். இது ஃபேஸ்புக்கினுள் ஒரு சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு நிரலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஆகும். இந்த அறிவிப்பானது உருவாக்குனர் சமூகத்தில் ஆர்வத்தீயை ஏற்படுத்தியது. ஒரு சில வாரங்களில் பல பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன. அதில் சிலவற்றை ஏற்கனவே இலட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இன்று உலகம் முழுவதும் 800,000 ஐக் காட்டிலும் அதிகமான உருவாக்குனர்கள் ஃபேஸ்புக் இயங்குதளத்திற்கான பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அக்டோபர் 24, 2007 அன்று ஃபேஸ்புக் இன்க். 1.6% பங்கை மைக்ரோசாஃப்ட் கார்பரேசனுக்கு $240 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. மேலும் ஆன்லைன் தேடுதல் முனைவரான கூகுள் இன்க்.கிடம் இருந்து போட்டி கோரிக்கையை நிராகரித்தது. இதன் மூலம் அந்த சமயத்தில் $15 பில்லியன் சந்தை மதிப்பை ஃபேஸ்புக் கொண்டிருப்பது தெரியவந்தது. மைக்ரோசாஃப்ட்டின் எக்ஸ்பாக்ஸ் 360 விளையாட்டுகள் கன்சோலின் ஒரு மென்பொருள் புதுப்பித்தலின் வெளியீட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் லாஸ்ட்.எஃபெம்மின் ஆதரவு இருந்தது.

ஸ்டீவ் ஜொப்ஸ்(Steve Jobs ), பிறப்பு பிப்ரவரி 24, 1955.ஸ்டீவ் ஜொப்ஸ், திருமணம் ஆகாத இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பிறந்தார். இவரின் பெற்றோர் சோஆன் சீப்லெ, சிரியா நாட்டினரான அப்துல்ஃவட்டா சண்டாலி ஆகியோர். ஆனால் கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளர் குடும்ப இணையர் பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் ஆகியோர் தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கினர். ஜொப்ஸ் தத்து எடுத்த சில மாதங்களிலேயே, அவருடைய பிறப்புப் பெற்றோர் திருமணம் செய்துகொண்டனர்; அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அப்பெண்குழந்தை தான் வளர்ந்த மங்கை ஆன பின்னரே தன் அண்ணனைப் பற்றி அறிந்தாள்.

1974ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். அதுவே அவர் புத்த மதத்தை தழுவக் காரணமாக இருந்தது.

 அக்டோபர் 5, 2011ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்.

1980  ஆண்டில்  ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க மாக்கிண்ட்டாசு (Macintosh) கணினியை அறிமுகப்படுத்தினார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் பேச்சு:

கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.அவருடைய உரையாடலில் சில  நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.

 1. நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன.
 2. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என் நிறுவனத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வாலிப பருவத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டேனா என என்னுள் கேள்விகளை கேட்டுக் கொண்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் “நெக்ஸ்ட்’ மற்றும் “பிக்ஸர்’ ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. “பிக்ஸரில்’ முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான “டாய் ஸ்டோரி’ உருவானது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக இது உள்ளது. சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், “நெக்ஸ்ட்டை’ வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன்.
 3. சிறு வயதில் இருந்தே ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ” உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்’ என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். “பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்’. இந்த வாசகத்துடன் உரையை முடித்தார்.
motivational/engkal.com

அடால்ஃப் இட்லர் (Adolf Hitler) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி இவா பிரானும்தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

அடால்ப் இட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ இட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860–1907), தந்தை அலாய்ஸ் இட்லர்-க்கும் (1837–1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா இட்லர் மட்டும்தான்.

தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்துத் துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று அறிகின்றோம். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதைக் கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தைமேல் அளவு கடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது என்றும் தெரிகின்றது.

தொடக்கத்தில் இட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர். இவர் படித்த பள்ளியில் இவர் வயதுடைய (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவவியலாளரான) லுட்வக் விட்ஜென்ஸ்டின் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலான வகுப்பில் படித்தார். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததேயில்லை.

வறுமையில் வாழ்தல்

இட்லர் 1905 ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை வியன்னாவில் தன் தாயுடன் வாழ்ந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (Academy of Fine Arts Vienna) அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. 21 டிசம்பர், 1909 அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் மார்பக புற்று நோய்தாக்கத்தால் மரணமடைந்ததாகப் பதிவேடுகள் கூறுகின்றன. இட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வறுமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. இட்லர் 21 ஆம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழ்க்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார்.

இட்லரின் பேச்சாற்றல்:

கட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஆண்டுகள் ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக 1920 ல் இட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 29 ஜூலை, 1921இட்லர் கட்சியின் ஃபியூரராக முதல் முதலாக அந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி அழைக்கப்பட்டார்.

இட்லரின் மரணமும் மர்மமும்:

இட்லரின் மரணம் இன்னும் நிரூபிக்கப்படாமல் மர்மமாகவே உள்ளது.

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் ஜெர்மனி மீது வலுவான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறமிருந்து ரஷ்யாவும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது. ஜெர்மனி மீது இவ்வாறு குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப் போரின் இட்லர், பெர்லின் நகரில் அரசு தலைமை அலுவலக கட்டடத்திற்கு கீழே நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க மாளிகையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்கியிருந்தார்.

1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி ஜெர்மனி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. இந்நிலையில் இட்லரும், அவரது மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களது உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக்கூடாது என்ற இட்லரின் ஆசைப்படி எரித்து சாம்பலாக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. இதுதான் உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்துக் கொண்ட தகவல் ஆகும். இதைத் தான் பெரும் பாலானோர் நம்பிக் கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் இட்லரின் இறுதி நாளில் அவரோடு இருந்தவர், அவரது மெய்க்காப்பாள ரான ரோஹுஸ் மிஷ், 95 வயதைக் கடந்து இன்றும் உயிரோடிருக்கும் மிஷ், அந்தக் கடைசி நேரக் காட்சிகளை நேரடியாகப் பார்த்தவர். எனவே, அவரது கூற்று உண்மையானதாக இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருந்தது.

பிளிப்கார்ட் (Flipkart) பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையவழியாகபொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வலைத்தளமாகும். இந்தியாவின் இணையவழி பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் இதுவே மிகப்பெரியதாகும்.

பிளிப்கார்ட் அக்டோபர் 2007 இல் சச்சின் பன்சால், பின்னி பன்சால் என்னும் இரு இளம் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டது. நிறுவனர்கள் இருவரும் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில்படித்து பின்னர் அமேசான் நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள். துவக்கத்தில் செவி வழிச் செய்தி மற்றும் டிவிட்டர், ஃபேஸ்புக் இணையதளங்களின் மூலமாகவே தங்கள் கடையினைப் பிரபலப்படுத்தினர். பிளிப்கார்ட் மார்ச் 2008 ஆம் அண்டு முதல் லாபத்தில் இயங்கத் துவங்கியது. துவங்கிய நாள் முதல் ஒவ்வொரு காலாண்டும் நூறு சதவிகித வளர்ச்சி கண்டிருப்பதாக நிறுவனத்தின் நிர்வாகம் கூறியுள்ளது. ஆரம்பத்தில் புத்தகங்களை மட்டுமே விற்று வந்த பிளிப்கார்ட், 2010 முதல் குறுவட்டு, டிவிடி, நகர்பேசி, மற்ற மின்னணு சாதனைகளையும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. 2009-10 இற்கான நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ. 20 கோடியாக இருந்தது. பிளிப்கார்ட்டின் நிறுவனர்கள் முதலில் சொந்தப் பணத்தைத் தான் முதலீடாகப் பயன்படுத்தினர். பின்னர் ஆக்சல் இந்தியா, டைகர் குளோபல் மேனேஜ்மன்ட் போன்ற பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தன. 2016 இல் பிளிப்கார்டில் 30,000 பேர் வேலை செய்கின்றனர்.

motivational/engkal.com

எலான் மஸ்க்  (Elon Musk) ஜூன் 28, 1971 அன்று தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார்,இவர் தற்போது எசுபேசுஎக்சுநிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை பொறியாளர்; தாயார் சத்துணவு நிபுணர். அவருடைய 12 வயது இருக்கும்போதே கணினியில் ஈர்ப்புக் கொண்டு தம்முடைய வீடியோ விளையாட்டுக்கு அவரே குறியீடுகள் எழுதி அதனை விற்று ஊதியம் அடைந்தார்.

கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்; ஆனால் படிப்பை அங்குத் தொடரவில்லை..

தொழிற் பணிகள்:

 • 1999 இல் பேபால் என்ற ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்.
 • ஜிப்2 குழுமத்தைத் தொடங்கி நடத்திச் சில காலம் கழித்து விற்றார்.
 • எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை 1999இல் தொடங்கினார்.
 • 2002 இல் ஸ்பேஸ் எக்ஸ் என்ற குழுமத்தையும் 2003 இல் டெல்சா மோட்டார்ஸ் என்ற குழுமத்தையும் தொடங்கினார்.
 • 2012 மே மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு ராக்கெட்டை அனுப்பினார்.
 • 2016 இல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார்.
 • வணிக நோக்கில் விண்வெளியில் சுற்றுலாப் பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்சின் முகாமையான அலுவல் ஆகும். மேலும் செவ்வாய்க்கோளுக்கு மனிதர்களைக் குடியேற்ற வேண்டும்; அது 2024 ஆம் ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் எலான் மசுக்.
 • பிற கூட்டாளிகளுடன் இணைந்து எலான் மஸ்க் நிறுவிய டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சார மகிழுந்துகள் பிரபலமாய் விற்பனை ஆயின. அமெரிக்க மகிழுந்துகள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்தையும் விஞ்சிவிட்டது என 2017 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.
motivational/engkal.com

உபர் (Uber) ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு பல நாடுகளிலும் நகரங்களிலும் தானுந்துப் பகிர்வு மற்றும் வாடகையுந்துச் சேவைகளை வழங்கும் பன்னாட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் நுண்ணறிபேசி பயன்பாட்டுச் செயலி மூலம் சவாரிக் கோரிக்கைகளை ஏற்று அதனைத் தங்கள் ஓட்டுநர்களுக்கு அனுப்புகின்றது. பயனாளர்கள் சவாரிக் கோரிக்கைகளை அனுப்பவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வண்டியின் அமைவிடத்தை சுவடு தொடரவும் இச்செயலியைப் பயன்படுத்துகின்றனர். ஆகஸ்ட் 29, 2014 நிலவரப்படி உலகெங்கும் 45 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்நிறுவனம் சேவை வழங்குகின்றது. இந்த நிறுவனத்தின் மதிப்பு டிசம்பர்  2014இல் US$40 பில்லியனுக்கும் கூடுதலாக மதிப்பிடப்படுகின்றது.

துவக்கத்தில், உபர் உயர்பகட்டு தானுந்துகளை மட்டுமே வாடகைக்கு வழங்கியது; உபர்பிளாக் என்ற பெயரில் முதன்மைச் சேவையை வழங்கியது.  2012இல் இந்த நிறுவனம் “உபர்X” என்ற திட்டத்தை விரிவாக்கியது; இதில் ஏற்றுக்கொள்ளத்தக்க வண்டியும் தகுதி பெற்ற ஓட்டுநரும் பங்கேற்க இயலும். சட்டவொழுங்கு இல்லாத காரணத்தால், உபர் நிறுவனத்தால் மிகக் குறைந்த கட்டணத்தில் சேவையளிக்க முடிந்தது. இதனால் வழமையான வாடகையுந்துச் சேவைகளை விட விரைவாக பரந்த சந்தையைப் பிடித்தது.

டிசம்பர் 2014 நிலவரப்படி, ஜெர்மனி , இந்தியா, தாய்லாந்து, எசுப்பானியா, பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. உபர் சேவைகள் இந்தியாவின் இரு நகரங்களிலும் எசுப்பானியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது;  ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் பல நாட்டு அரசுகளுடன் பிரச்சினைகளை தீர்க்க உரையாடி வருகின்றது.

டிசம்பர்  2014இல் இந்தியாவின்  தலைநகர் புது தில்லியில் உபர் சேவையை பாவித்த பெண் பயணி ஒருவரை வண்டி ஓட்டுநர் வன்புணர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து கட்டாயமாக்கப்பட்டுள்ள நகரத்தின் காவல்துறை சரிபார்ப்பு செய்முறையை பின்பற்றவில்லை என உபர்சேவைகள் தடை செய்யப்பட்டன.

இணையவழி வாடகையுந்துச் சேவைகளை தடை செய்யுமாறு இந்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்த அடுத்த நாளே ஐதராபாத்தின் சாலைப் போக்குவரத்து ஆணையம் உபர் சேவைகளை முடக்கியது. உபர் நகரத்தில் இயங்க உரிமம் பெறவில்லை என்றும் நகர மக்கள் உபரின் சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஆணையத்தின் தகவல் அதிகாரி கூறினார்.

ஜேன் கோம் ( Jan Koum )  1976  ஆம் ஆண்டு 24 பிப்ரவரி -ல் பிறந்தார்.  என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த கணினி நிரலரும் இணைய புதுப் புனைவரும் ஆவார்.

 வாட்சப் என்னும் செய்தி பரிமாற்ற செயலியைப் பிரையன் ஆக்டனுடன் இணைந்து உருவாக்கியவர். வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து 2014 இல் கையகப்படுத்தினர். வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து 2014 இல் கையகப்படுத்தினர்.

ஜேன் கோம் உக்ரைனில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். வறுமையின் காரணமாக வணிகக் கடைகளில் தரையைத் துப்புரவு செய்யும் வேலையைச் செய்தார். வறுமையில் உழலும் ஏழைகளுக்கு வழங்கப்படும் சலுகை உணவுப் பொருள்களைப் பெற்று வாழ்ந்தார். யாகூ குழுமத்தில் ஒன்பது ஆண்டுகள் பணி செய்தார். தமது 18 ஆம் வயதில்  கணினி நிரலாக்கம் செயவதில் ஆர்வம் காட்டினார்  சான் ஜோஸ் மாநில பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார்.

எர்னஸ்ட் அண்ட் யங் என்ற குழுமத்தில் பணியாற்றிய போது, பிரியன் ஆக்டன் என்பவரைச் சந்தித்து இருவரும் நண்பர்கள் ஆனார்கள். யாகூ குழுமத்திலிருந்து இருவரும் விலகி தென் அமெரிக்காவில் ஓராண்டு பயணம் செய்தார்கள். முகநூல் குழுமத்தில் பணியில் இணைய இருவரும் விண்ணப்பம் போட்டார்கள் ஆனால் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை  அதன் பின்னர் 2009 சனவரியில் கோம் ஐபோன் ஒன்று வாங்கினார். அந்நிகழ்ச்சி வாட்சப் தொடங்குவதற்கான எண்ணத்தையும் திட்டத்தையும் வகுக்க ஏதுவாக அமைந்தது. 2009 பிப்பிரவரியில்  கலிபோர்னியாவில்  ஜென் கோம் தம் நண்பர் பிரியன் ஆக்டனுடன் இணைந்து வாட்சப் குழுமத்தைத் தொடங்கினார்.

வாட்சப் குறுகிய காலத்தில் உலக  மக்களிடையே விரைவாகப் பயன்பாட்டுக்கு வந்ததைக் கவனித்த முக நூல் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க், ஜேன் கோமை 2012 ஆம் ஆண்டில் சந்தித்தார். பல சந்திப்புகளுக்குப் பிறகு 19 பில்லியன் டாலர் விலைக்கு வாட்சப் பங்குகளை வாங்குவதாக முக நூல் அறிவித்தது.

motivational/engkal.com

லாரன்ஸ் ஜோசப் பிறப்பு; 17 ஆகஸ்ட் 1944, இவர் அமெரிக்க தொழில்முனைவோர் மற்றும் ஆரக்கிள் கார்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனரும் சி.ஈ.ஓ பதவி வகிப்பவரும் ஆவார். இந்நிறுவனம் முக்கிய மென்பொருள் தொழில் நிறுவனம் ஆகும்.

லாரி எலிசன்  நியூயார்க் நகரில் ப்ளோரன்ஸ் ஸ்பெல்மேனுக்கும் 19-வயது திருமணமாகாத யூத தாய்க்கு மகனாகப் பிறந்தார். அவரது தாயின் கோரிக்கையின் படி அவரை அவரது தாயின் சித்தி மற்றும் சித்தப்பாவிடம் சிகாகோவில் வளர்க்க அளிக்கப்பட்டார். லில்லியன் ஸ்பெல்மேன் எலிசன் மற்றும் லூயிஸ் ஆகியோர் அவரை ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது தத்தெடுத்தனர். எலிசன் அவரது 48 வயது வரையில் தனது தாயின் பெயரை அறியாதவராக அல்லது அவரை சந்திக்காதவராக இருந்தார்; அவரது தந்தையின் அடையாளம் தெரியாது.

1970களில் எலிசன் அம்பெக்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சி.ஐ.ஏ நிறுவனத்திற்கான தரவுத்தளம் அவரது பணித்திட்டங்களில் ஒன்று, அதற்கு அவர் “ஆரக்கிள்” எனப் பெயரிட்டார்.

“பெரிய அளவில் பகிரப்பட்ட தரவு வங்கிகளுக்கான தரவின் தொடர்புடைய மாதிரி” என்றழைக்கப்பட்ட தொடர்புடைய தரவுத்தள அமைப்புகள் பற்றி எட்கர் எப். காட் எழுதிய ஆய்வறிக்கை எலிசனை வெகுவாகப் பாதித்தது.

அவர் ஆரக்கிள் நிறுவனத்தை 1977 ஆம் ஆண்டில், சாப்ட்வேர் டெவலப்மெண்ட் லேபரட்டரீஸ் (எஸ்.டி.எல்) என்ற பெயரில் வெறும் $1400 தனது சொந்தப் பணத்தைக் கொண்டு நிறுவினார். 1979 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் ரிலேஷனல் சாப்ட்வேர் இங்க். என்று பெயர்மாற்றப்பட்டது. பின்னர் முதன்மைத் தயாரிப்பு ஆரக்கிள் தரவுத்தளம் வெளிவந்த பின்னர் ஆரக்கிள் என்று பெயர்மாற்றப்பட்டது

அவர் தற்போது போர்பஸ் பத்திரிக்கையின் உலகிலுள்ள பில்லியன் அதிபர்களில் (10 மார்ச் 2010 அன்று வெளிவந்த பட்டியலின் படி) ஆறாவது செல்வந்தராக பட்டியலிடப்பட்டுள்ளார். எலிசன் 28 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் அமெரிக்காவின் மூன்றாவது பணக்காரராக உள்ளார்.

motivational/engkal.com

சுந்தர் பி

அமேசான்.காம்,(amazon.com,) என்பது அமேரிக்க பன்நாட்டு இணைய வணிகநிறுவனமாகும். இது சியாட்டல், வாசிங்டனில் உள்ளது., இது அமேரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய இணைய அங்காடியாகும். இதன் இணைய விற்பனை ஸ்டெப்பிள்சு நிருவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

ஜெப் பெசோஸ் அமேசான்.காம்மை 1994ல் தொடங்கி, 1995ஆம் ஆண்டு இணையத்தில் வெளியிட்டார். இது ஒரு இணையப் புத்தக அங்காடியாகத் தொடங்கப்பட்டது. விரைவில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்க ஆரம்பித்தது. அவை டி.வி.டி, இசை குறுந்தட்டுகள் மற்றும் எம்.பி.3க்கள், கணினி மென்பொருகள், விழி விளையாட்டுகள், எலெக்டிரானிக்சுகள், துணிகள், உணவுகள் மற்றும் பொம்மைகள் ஆகும். அமேசான் தனக்கென தனியான தளத்தினை முக்கிய நாடுகளில் நிருவியுள்ளது. அவை கனெடா, யுனைட்டு கிங்டம், செர்மனி, பிரான்சு, சீனா, சப்பான் ஆகும். சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.

வெர்டிக்டு ஆராய்ச்சி கழகம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி சனவரி 15, 2009 அன்று வெளியிட்டது. அதில், அமேசான் தான் யூ.கே மக்களுக்கு பிடித்தமான இசை மற்றும் விழிகள் விற்பனையாளர் என்று கூறப்பட்டிருந்தது. விற்பணைப்பட்டியலில் மூன்றாவது இடத்தினையையும் பிடித்தது.[3] இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்காவில் தங்கி படித்துவந்த நர்சி மாணவி ஆர்யா சிங் என்பவருக்கு சயனைடு விற்பனை செய்துள்ளது. மாணவி அதை உட்கொண்டு மரணம் அடைந்துவிட்டார். அதனால் அந்த மாணவியின் தாயார் இந்த நிருவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ச்சை என்கின்ற பிச்சை சுந்தரராசன் தமிழ் நாட்டில், மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார்.

சுந்தர் பிச்சையின் படிப்பு:

இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

பள்ளிக்காலத்திலிருந்தே தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதில் சுந்தர் பிச்சைக்குத் தனித் திறமை இருந்துவந்தது.

கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக அவருடைய 43 -வது வயதில் சுந்தர் பிச்சை  பதவியேற்றார்.

  சுந்தர் பிச்சை இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார். இவரை கூகுளின் அடுத்த முதன்மை செயல் அலுவலராக ஆகஸ்ட் 10, 2015 அன்று கூகுள் அறிவித்தது.

கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்துவந்தது.

இதற்கும் முன்னதாக, அந்நிறுவனத்தின் உயர்பதவியில் இருந்த லாரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்றவர்கள் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்புகளை சுந்தர் பிச்சையிடம் அளித்துவந்தாலும், இப்போது, அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க தொழில்நுட்பத்துறையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள சத்யா நாதெல்லாவுக்குப் பிறகு, மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர்  15  -ல்  ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக  தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர்  இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:     

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:    

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

     அக்னி சிறகுகள்

     இந்தியா 2020

     எழுச்சி தீபங்கள்

     அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக போற்றப்படுகிறார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

Close Menu