விளையாட்டு செய்திகள் _முதல் முறையாக பைனலுக்கு முன்னேறிய குரேஷியா

முதல் முறையாக பைனலுக்கு முன்னேறிய குரேஷியா

ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பைனலுக்கு தங்களுடைய நாட்டு அணி முன்னேறியதை,  இதை குரேஷிய மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொண்டாட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.

football news engkal.com 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் நேற்று இரவு நடந்த அரை இறுதியில் இங்கிலாந்தை 2-1 என வென்றது குரேஷியா. இதன் மூலம் முதல் முறையாக உலகக் கோப்பை பைனலுக்கு முன்னேறியது. டுவிட்டர் உள்பட சமூகதளங்களில் குரேஷியாவுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

இந்த நிலையில் குரேஷியாவின் தலைநகர் ஜாக்ரெப் உள்பட பல்வேறு நகரங்களில் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. 1991ல் சுதந்திரம் பெற்றது குரேஷியா. அப்போது நடந்த கொண்டாடங்களை மிஞ்சும் வகையில், நேற்று ரசிகர்கள் தூள் கிளப்பினர்.

தெருவெங்கும் ரசிகர்கள் ஜாக்ரெப் உள்பட பல்வேறு நகரங்களில் பொது இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி, அரை இறதி ஆட்டத்தை பார்த்தனர். 109வது நிமிடத்தில் மரியோ மன்ட்ஜூகிக் கோலடிக்க 2-1 என முன்னிலை பெற்றது குரேஷியா.

அப்போது ரசிகர்களின் கொண்டாட்டம் உச்சத்தை எட்டியது. அணியின் சிவப்பு, வெள்ளை கட்டம் போட்ட சீருடையில் இருந்த ரசிகர்கள், பட்டாசுகளை வெடித்தும், கொடிகளை பறக்க விட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குரேஷியாவின் பல பகுதிகளில் இதுபோன்ற கொண்டாட்டம் விடிய விடிய நடந்தது. முதல் முறையாக பைனல் சென்றுள்ளதால் நடந்துள்ள இந்த கொண்டாட்டம் ஒரு சாம்பிள்தான் என்கின்றனர் ரசிகர்கள்.

15ம் தேதி பைனல் வரும் 15ம் தேதி நடக்கும் பைனலில் பிரான்ஸை சந்திக்கிறது குரேஷியா. அந்தப் போட்டிக்குப் பிறகு தங்களுடைய கொண்டாட்டம் தொடரும் என்று உற்சாகத்தில் குரேஷிய ரசிகர்கள் மகிழ்கின்றன

Leave a Reply

Close Menu