விளையாட்டு செய்தி 26.06.2018 01

பெண்களுக்கான  டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியீடு!

டி20 கிரிக்கெட் போட்டிக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மே 30 முதல் ஜூலை 15ம் தேதி வரை ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைப்பெற உள்ளது.

sports news engkal.comஇந்நிலையில்  நவம்பர் 3ம் தேதி பெண்ளுக்கான டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ளது.

இந்த தொடர் நவம்பர் 3 தொடங்கி 24ம் தேதி வரை நடைப்பெற உள்ளன. இதற்கு முன் கடைசியாக 2016ல் நடந்த பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா பெண்கள் அணியை, வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த போட்டி தொடர்,  ஏ, பி என இரு பிரிவுகளாக தலா 5 அணிகளை பிரித்து போட்டி நடத்தப்படுகிறது. மற்றும் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸில் நடைப்பெற உள்ளன.

குரூப் ஏ :

வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து

இலங்கை

தென் ஆப்ரிக்கா

  1. தகுதி பெறும் அணி 1

குரூப் பி :

ஆஸ்திரேலியா

நியூசிலாந்து

பாகிஸ்தான்

இந்தியா

  1. தகுதி பெறும் அணி 2
  2. 9வது, 10வது அணியை தேர்ந்தெடுக்கும் வகையில் தகுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Leave a Reply

Close Menu