tamil movies review-கடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்

இயற்கை விவசாயமும் ., இயற்கையோடு இசைந்த கூட்டுகுடும்ப வாழ்க்கையே இப்படத்தின் கருத்து.

கதை: அந்த ஊரின் பெரிய தலை கட்டும், ஐந்தாயிரம் ஓட்டும் உள்ள பெருங்குடும்பம் பெருநாழி ரணசிங்கம் சத்யராஜினுடையது. ஒன்றுக்கு இரண்டு தாரங்கள் இருந்தும், நான்கைந்து குழந்தைகள் இருந்தும் . ஆண் குழந்தை இல்லாததால் மூன்றாவது தாரத்திற்கு சத்தியராஜ் முயற்சி எடுக்கும் வேளையில் ., நல்ல வேளைக்கு.முதல் தாரத்திற்கு ஐந்தாவதாக பிறக்கிறது ஒரு ஆண் பிள்ளை .அவர் தான் “கடை குட்டி சிங்கம் “பெருநாழி குணசிங்கம் -கார்த்தி., கார்த்தி பிறப்பதற்கு கொஞ்சம் முன்னே கார்த்தியின் மூத்த அக்கா மெளனிகா – சரவணன் தம்பதிக்கு பிறந்த ஆண் வாரிசு சூரி .

கிட்டத்தட்ட ஒத்த வயதுடைய மாமா கார்த்தியும் , மாப்பிள்ளை சூரியும் சொந்த பந்தங்களிடமும் , ஜாதி ஜனத்திடமும் பண்ணும் ரவுசும், தரிசு நிலத்திலும் இயற்கை உரத்தால் செய்யும் விவசாய அதிசயமும் தான் “கடைக்குட்டி சிங்கம் ” படத்தின் கதை மொத்தமும்.

காட்சிப்படுத்தல் : கார்த்தி , சாயிஷா , சத்யராஜ், சூரி, பிரியா பவானி சங்கர், அர்த்தனாபினு, பானுப்ரியா , விஜி சந்திரசேகர், “பருத்தி வீரன்” சரவணன், பொன் வண்ணன் , ஸ்ரீமன் , சந்துரு, இளவரசு , மனோஜ்குமார் , மனோபாலா , ஜான் விஜய் ,மெளனிகா ,யுவராணி , தீபா , இந்து மதிமணிகண்டன் ,ஜீவிதா கிருஷ்ணன் , ரீத்து ரவி , செந்திகுமாரி , சவுந்திரராஜன் , “பசங்க ” பாண்டி.உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்க ., டி.இமானின் இசையில், “பசங்க ” பாண்டிராஜின் எழுத்து , இயக்கத்தில் , நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ., திரைக்கு வந்திருக்கும் “கடைக்குட்டி சிங்கம் “. படத்தில் மேற்படி

கதையுடன் கொஞ்சம் காதல் , கொஞ்சம் ஜாதிக்குள்ளேயே மோதல் , நிறைய நல்ல நல்ல மெஸேஜ் என ஜனரஞ்சக அம்சங்கள் எல்லாம் கலந்து கட்டி “கடைக்குட்டி சிங்கம் ” படத்தை , இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் ஏற்றபடி , கலர்புல் குட்டியாக காட்சிப் படுத்தியிருக்கின்றனர் இப்படக்குழுவினர் .என்பது பெரும் ப்ளஸ் 

கதாநாயகர்: ,”கடை குட்டி சிங்கம் “எனும் பெருநாழி குணசிங்கமாக கார்த்தி., கார்த்தி , இயற்கை. விவசாயி ஆகவும் , நாயகி சாயிஷாவுக்கு ஏற்ற இளம் காதலனாகவும் , அக்காக்கள் குடும்பத்திற்கு ஒன்றென்றாலும் , அநியாயத்தைக் கண்டாலும் பொங்கி எழுந்து எதிராளிகளை பொடிமாஸ் செய்யும் முரட்டு தம்பியாகவும் செம யதார்த்த பில்டப் கேரக்டரில் உயிரைக் கொடுத்து அனாயாசமாக நடித்திருக்கிறார் .

கதாநாயகி : கண்ணுக்கினியாளாக., சாயிஷா – செம சாய்ஸ் அய்யா…. எனும் அளவிற்கு நாயகர் கார்த்தியின் கண்களுக்கு மட்டுமின்றி காட்சிக்கு காட்சி ரசிகனின் கண்களுக்கும் இனியாளாக இனிக்கிறார்.

அப்பா நாயகர் : கார்த்தியின் அப்பா கேரக்டரில் ,ஊரின் பெரிய தலை கட்டும், ஐந்தாயிரம் ஓட்டும் உள்ள பெருங்குடும்பத் தலைவர் பெருநாழி ரணசிங்கமாக சத்யராஜ் வழக்கம் போலவே அந்த கேரக்டராக கர்ஜித்திருக்கிறார்.

காமெடியன் : கார்த்தியின் மூத்த அக்கா மெளனிகா – சரவணன் தம்பதிக்கு பிறந்த ஆண் வாரிசாக கார்த்தியை மாமா , மாமா என்று அழைத்தபடி கதையோடு ஒட்டிய காமெடி செய்து ரொம்ப நாளைக்கப்புறம் செமயாய் ஜெயித்திருக்கிறார் சூரி.

பிற நட்சத்திரங்கள் :நாயக நடிகர் நடிகைகளின் பாத்திரப்பெயர்கள்மட்டுமின்றி, சத்திக்கு ஜோடியாக வரும் பானுப்ரியா , விஜி சந்திரசேகர், “பருத்தி வீரன்” சரவணன், பொன் வண்ணன் , ஸ்ரீமன் , சந்துரு, இளவரசு , மனோஜ்குமார் , மனோபாலா , ஜான் விஜய் ,மெளனிகா ,யுவராணி , தீபா , இந்து மதிமணிகண்டன் ,ஜீவிதா கிருஷ்ணன் , ரீத்து ரவி , செந்திகுமாரி , சவுந்திரராஜன் , “பசங்க ” பாண்டி… உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இப்படத்தில் சூட்டப்பட்டிருக்கும் பாத்திரபெயர்களும் அவர்களது இயல்பான நடிப்பும் செம்ம

பலவீனம் : அப்படி பெரிதாக எதுவும் தென்படவில்லை .

இயக்கம் : “பசங்க ” பாண்டிராஜின் எழுத்து , இயக்கத்தில் , முழு நீள ஜனரஞ்சக திரைப்படமாக செம மெஸேஜுடன் வந்திருக்கும் “கடைக்குட்டி சிங்கம் ” படத்தில் .மனுஷனை விட மாட்டுக்கு எவ்வளவு மாஸ் இந்த பந்தையங்களையா  நாம் இவ்வளவு நாள் தடை செய்திருந்தோம் .என ஜல்லிக்கட்டு ரேக்ளா ரேஸ் உள்ளிட்டவை

பைனல்”பன்ச் ” : “கடைக்குட்டி சிங்கம் ‘ – ‘கலக்கல் கிங்கம்.

admin

admin

1,832 thoughts on “tamil movies review-கடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்

  1. The agony that additional resources allergic reactions can create is something with review which unknown varieties of individuals recognize with. The reality is, however, that there are remedies readily available for those who seek them. Start making use of the suggestions and also tips in this piece, as well as you will certainly have the devices required to overcome allergies, at last.
    Monitor plant pollen projections and also plan appropriately. Numerous of the preferred weather condition projecting websites have a section committed to allergy forecasts including both air high quality as well as pollen matters if you have access to the internet. On days when the count is mosting likely to be high, maintain your windows shut and restrict your time outdoors.
    Plant pollen, dirt, and also other allergens can get caught on your skin and also in your hair as you go with your day. If you typically bath in the early morning, think about switching to an evening timetable.